×

நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுரை

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023ன்டி, 2/2022-23ஆம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை, கடந்த மார்ச் 3ம் தேதிக்குள் செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் மற்றும் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் தற்போது, செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியினை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சொத்துவரியானது, பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாய் ஆகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப் பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் முதலியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசால், அரசாணை எண்.44, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை, நாள்:12.04.2023ல், தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம், 1998, வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டம் வரப்பெற்றுள்ளது. 13.04.2023 முதல் நடைமுறைக்கு கொண்டு அரசாணை எண்.45, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை, நாள்:12.04.2023ன்படி, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி சட்ட விதியின்படி, அரையாண்டு காலத்திற்குரிய சொத்துவரியினை செலுத்தாதவர்கள் அதாவது கடந்த 2/2022-23 ஆம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வரித் தொகை மீது, மாதத்திற்கு 1 சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களில், தற்போது நிலுவை சொத்துவரி செலுத்தாத 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்களின் நிலுவை வரித் தொகை மீது, மேற்படி சட்ட விதிகளின்படி 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி சட்ட விதிகளின்படி, முந்தைய அரையாண்டு காலம்வரையில் செலுத்தாத நிலுவை வரித் தொகை மீது, நடப்பு அரையாண்டின் ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் தனிவட்டி விதிக்க வழிவகை உள்ளதால், சொத்து வரி உரிமையாளர்கள் நிலுவை சொத்துவரியினை எவ்வித சிரமுமின்றி, கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் எளிதாக செலுத்தலாம்.

1. வரிவசூலிப்பாளர்களின் மூலமாக, Swiping-வசதியுடன் கூடிய கையடக்ககருவி உதவியுடன், கடன் மற்றும் பற்று அட்டைகள் (Credit and Debit) மூலமாக செலுத்தலாம்.

2. மண்டலம்/வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களில் சொத்துவரி செலுத்தலாம். 3. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள குறிப்பிட்ட வங்கிகளில், நேரடியாக பணமாக செலுத்தலாம்.

4. ‘நம்ம சென்னை Mobile App மற்றும் ‘பேடிஎம்’ Mobile App-முதலிய கைப்பேசி செயலி மூலமாக செலுத்தலாம்.

5.BBPS (Bharat Bill Payment System) என்ற சேவை மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.

6. பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் www.chennaicorporation.gov.in வாயிலாக, இணைய வழி செலுத்துதல் (Online payment) மூலம், பரிமாற்றக் கட்டணம் இல்லாமல் (Nil transaction fee) செலுத்தலாம்.

7. சொத்து உரிமையாளர்களின் சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள QR Code Scanning உதவியுடன் சொத்துவரியினை செலுத்தலாம்.

8. வருவாய் துறை தலைமையிடத்தில், நிறுவப்பட்டுள்ள KIOSK என்ற தானியங்கி கருவின் மூலம், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி காசோலையினை எளிதாக செலுத்தி, சொத்துவரி ரசீதுகளை பெறலாம்.

எனவே, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023ன்டி, 2/2022-23 ஆம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை, கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் மற்றும் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள்/உபயோகிப்பாளர்கள், தற்போது, செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியினை மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் உடனடியாக செலுத்தி, மேற்படி சட்ட விதிகளின்படி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மீது, மாதம் தோறும் விதிக்கப்படவுள்ள 1 சதவீதம் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Sothary ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...